மனித கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவி வாழ்க்கையை மையமாக வைத்து வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் திரைத்துறையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில்...
"நான் சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து என் மனம் சொல்வதை கேட்டுப் பின்பற்ற ஆரம்பித்தேன். அது முடிவெடுக்க எனக்கு எளிதாக இருந்தது. நான் என்னை எந்த விதத்திலும் புரட்சி முடிவு எடுப்பவளாக பார்க்கவில்லை. தங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதை செய்யாமல் தங்களுக்கு பிடித்ததை செய்யும் போது அவர்கள் புரட்சி முடிவு எடுப்பதாக கூறுகிறோம் என நினைக்கிறேன். எனக்கு அப்படி எந்த ஒரு புரட்சி நோக்கமும் கிடையாது. எனக்கு பிடித்ததை செய்தேன்" என கூறியுள்ளார்.