Skip to main content

சர்வதேச திரைப்பட விழாவை கலக்கும் வஸந்தின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
sisp

 

 

இயக்குனர் வஸந்தின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 23வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் திரைடப்பட்டு தற்போது சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்தவாரம் சர்வதேச புனே திரைப்பட விழாவில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், 'மயக்கம் என்ன' சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்