Skip to main content

“எல்லோரும் எதிர்பார்ப்பதை விஜய் செய்வார்” - சினேகா

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
sneha about vijay politics

சென்னையில் ஈவெண்ட் ஆர்ட் நிறுவனத்தின் மார்வெலஸ் மார்கழி திருவிழா தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இருவரும் அவர்களது சினேகாலயா சில்க்ஸ் நிறுவன உடை அணிந்து ரேம்ப் வாக் செய்தனர். 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் விழா குறித்து மகிழ்ச்சியுடன் பேசினர். அப்போது அவர்களிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்கள், “அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நிறைய பேர் ஆசைப்பட்டாங்க. கண்டிப்பா நல்லது பண்ணுவாருன்னு எல்லாரும் எதிர்பாக்குறாங்க. அதை செய்வார் என நம்புறோம். சினிமாவை விட்டு அவர் செல்ல முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட விஷயம்” என்றனர்.   

பின்பு அவர்களிடம் கங்குவா பட விமர்சனம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மோசமான இசையை கொடுக்க வேண்டும் என டார்ய்ம் உழைப்பதில்லை. இருந்தாலும் மக்கள் சொல்வது தான் இறுதி. அவர்கள் எது சொன்னாலும் அதை ஏத்துக்கிட்டுத் தான் ஆகணும்” என்று பதிலளித்தனர். சினேகா கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்