Skip to main content

சென்னை சர்வதேச திரைப்பட விழா; திரையிடப்படும் படங்களின் பட்டியல்

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
tamil films to be screened in ciff

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 22வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா வருகிற 12ஆம் தேதி முதல் 19 தேதி வரை நடக்கிறது. பி.வி.ஆர் ராயப்பேட்டை, பி.வி.ஆர். மைலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் நடக்கிறது. 

இந்த நிலையில் இந்த விழாவில் திரையிடப்படும் திரைப்படங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட பிரிவில் அமரன், போட், புஜ்ஜி அட் அனுப்பட்டி, செவப்பி, ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வெப்பம் குளிர் மழை, வேட்டையன், அயலி, டிமாண்டி காலனி 2, கருடன், ஹாட்ஸ்பாட், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் மற்ற பிரிவுகளில் தமிழ் படம் என்று பார்க்கையில் இந்தியன் பனோரமா பிரிவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையிடப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்