மதுரை வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் பொங்கல் விழா நடந்தது. வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் அத்துறையின் தலைமை ஆணையர் சஞ்சய்ராவ், முதன்மை ஆணையர் வசந்தன், கூடுதல் ஆணையர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களோடு நகைச்சுவை நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழா முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “ஏழைகளுக்கு வரியை கொஞ்சம் பார்த்து போடுங்க என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்றார். பின்பு அவரிடம் விஜய் அரசியல் குறித்தும் அஜித் கார் ரேஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பின்பு அவரது படங்கள் குறித்து பேசிய அவர், “சுந்தர்.சி-யுடன் கேங்கர்ஸ் படம் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஃபகத் ஃபாசிலுடன் மாரீசன் படம் இருக்கிறது. அடுத்தாக பிரபு தேவாவுடன் நடிக்கப்போகிறேன். ஏப்ரலில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.