கார்த்தி தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படங்களை அடுத்து டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. இப்படம் பீரியட் ட்ராமா ஜானரில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகுவுள்ளதாக கூறப்படும் நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் வடிவேலு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முக்கியமான ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வடிவேலு மாமன்னன் படத்திற்கு பிறகு மாரீசன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் கேங்கர்ஸ் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்தி படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.