Skip to main content

"என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள்..? என்று கேட்டார்" - வடிவேலு விளக்கம்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

vdbdfhbfd

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் வடிவேலு கரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில்..

 

"கரோனாவால் பீதி ஏற்பட்டுள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்கக் கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது இந்தக் கரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை. என்னிடம் ஒரு அம்மா, ‘எப்போது நடிக்கப் போகிறீர்கள்’ என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாகப் போய் நடிப்பது. இறைவன் கரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறான். 

 

கரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும். ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால்விட்டு நடித்திருந்தேன். அதை காமெடியாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணரவைத்திருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்