ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் வரை டாப் 250 இந்தியத் திரைப்படங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 62 தமிழ்ப் படங்கள் வெளியிட்டுள்ளது.
நாயகன், ராக்கெட்ரி, அன்பே சிவம், பரியேறும் பெருமாள், ஜெய் பீம், சூரரைப் போற்று, 96, கைதி, அசுரன், விசாரணை, தேவர் மகன், தளபதி, சர்பட்டா பரம்பரை, தனி ஒருவன், வட சென்னை, அந்நியன், ராட்சசன், பேரன்பு, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா, விக்ரம், இருவர், கண்ணத்தில் முத்தமிட்டால், அருவி, முதல்வன், புதுப்பேட்டை, துருவங்கள் பதினாறு, ஜிகர்தண்டா, சூது கவ்வும், விருமாண்டி, காக்கா முட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, பாட்ஷா, பிதாமகன், அலைபாயுதே, ரோஜா, பம்பாய், இந்தியன், வாரணம் ஆயிரம், படையப்பா, விடுதலை பார்ட் 1, தடம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஆடுகளம், மாநகரம், தெய்வத் திருமகள், கார்கி, விண்ணைத்தாண்டி வருவாயா, கர்ணன், போர் தொழில், பீட்சா, லவ் டுடே, ஹேராம், துப்பாக்கி, கில்லி, காக்க காக்க, போக்கிரி, வேட்டையாடு விளையாடு, துள்ளாத மனமும் துள்ளும், கத்தி, ஆயிரத்தில் ஒருவன், பூவே உனக்காக” உள்ளிட்ட படங்கள் ஆகும்.