Skip to main content

'ஸ்க்விட் கேம்' சீசன் 2 - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

'Squid Game' Season 2 - Netflix announces official announcement

 

'ஸ்க்விட் கேம்', கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கொரியன் வெப் சீரிஸ். சர்வைவல், த்ரில்லர், ஹாரர், ஆக்ஷன் என அனைத்து ஜானரும் கலந்து வெளியான இந்த வெப் சீரிஸின் முதல் சீசன் உலக அளவில் கவனம் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட வெப் சீரிஸ்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்த சீரிஸ் என்ற பெயரையும் 'ஸ்க்விட் கேம்' பெற்றது. 

 

இதனிடையே இந்த சீரிஸ் கிட்டத்தட்ட 94 நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகவும், 142 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களையும் ஈர்த்தது. மேலும் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் மணி நேர பார்வை நேரத்தைக் கடந்து அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் என்ற பெருமையையும் பெற்றது. ஒன்பது எபிசோட் கொண்ட 'ஸ்க்விட் கேம்' முதல் சீசனில் லீ ஜங் ஜே, பார்க் ஹே-சூ, வை ஹா ஜூன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'சைரன் பிக்சர்ஸ்' தயாரித்திருந்த இந்த சீரிஸை ஹ்வாங் டோங் ஹ்யுக் இயக்கியிருந்தார்.  

 

இந்நிலையில் 'ஸ்க்விட் கேம்' சீரிஸின் இரண்டாம் சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சீரிஸின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹ்வாங் டோங் ஹ்யுக், ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " 'ஸ்க்விட் கேம்' முதல் சீசனை கொண்டுவர 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் வெறும் 12 நாட்களில் மிகவும் பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் தொடராக 'ஸ்க்விட் கேம்' மாறியது. 'ஸ்க்விட் கேம்' சீரிஸை உலகம் முழுவதும் பார்த்து அன்பை பகிர்ந்த ரசிகர்களுக்கு இந்த சீரிஸின் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்று முறையில் நான் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் " என குறிப்பிட்டு சீசன் 2 வருகிறது என கூறியுள்ளார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொங்கல் பண்டிகை; ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
New update of 'Vidamuyarchi' movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘படாஸ் மா...’ - விஜய்யின் லியோ ஓடிடி அப்டேட்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

vijay leo ott update

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. 

 

முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் 7 நாட்களில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் படக்குழு அறிவித்தது. இந்த வெற்றியை பிரம்மாண்டமாக படக்குழு கொண்டாடியது. இதையடுத்து ‘நா ரெடி...’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிலும், 28 ஆம் தேதி உலகெங்கிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.