Published on 02/12/2024 | Edited on 02/12/2024

கன்னட சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ஷோபிதா சிவண்ணா(30). 2015ஆம் ஆண்டு வெளியான ரங்கி தரங்கா படம் மூலம் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். பின்பு பல்வேறு படங்களில் நடித்த நிலையில் கன்னட சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவரது உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவரது திடீர் மறைவு கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி கன்னட திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.