Skip to main content

“அதற்காக நான் உண்மையாக மன்னிப்பு கேட்கிறேன்” - பிக்பாஸ் சாக்‌ஷி வருத்தம்

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனிலும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்குகிறார்.  
 

sakshi

 


இந்த நிகழ்ச்சியை மக்கள் பலரும் பார்த்து வருகிறார்கள் என்று கமல் ஹாசன் உள்ளே பங்குபெற்றிருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவுரை செய்வார். மக்கள் பலரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இது இருப்பதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் வரை வந்துள்ளது.

இந்நிலையில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 74-வது நாளில் போட்டியாளர்கள் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா, ஷெரின் தர்ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.

இதனால், கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டையிட்டுவிட்டு தனியா சென்று அழுது கொண்டிருந்தார். அப்போது அவரை சமாதானம் செய்வதற்காக சென்ற சாக்‌ஷி, நாய்கள் ரோட்ல குரைக்கும் அத பத்தி கவலைப்படுவியா என்றும்.. நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன், பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பல இணையவாசிகள் எப்படி அவர் மக்களை நாய்கள் என்று சொல்லலாம் என்று சமூக வலைதளத்தில் கண்டனங்களை பதிவிட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ள சாக்‌ஷி ட்விட்டரில் மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதில், “அனைத்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும், எனது வார்த்தைகள் உங்கள் உணர்வைப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனது அறிக்கை பார்வையாளர்களைப் பொதுமைப்படுத்துவதாக இல்லை. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாகத் தவறு செய்திருந்தால் ப்ளீஸ் என்னை மன்னித்து எனக்கு ஆதரவளிக்கவும்" என்று தெரிவித்துள்ளார் சாக்‌ஷி.

 

 

சார்ந்த செய்திகள்