Skip to main content

"ரோலெக்ஸ்..." - 'விக்ரம்' குறித்து கார்த்தி ட்வீட்

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

"Rolex ..." - Karthi tweets about 'Vikram'

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (03.06.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில், நடிகர் கார்த்தி 'விக்ரம்' படத்தை பார்த்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், " அனைவரும் குறிப்பிட்டது போல், நம்ம கமல்ஹாசன் சாரின் உண்மையான கொண்டாட்டம் இது. ஆக்‌ஷன் மற்றும் காட்சிகள் முழுவதும் சுவாரஸ்யமான இணைப்புகளும் ஆச்சரியங்கள் நிறைந்ததுமாக இருந்தது. ஃபகத் ஃபாசில் ஒருதுளி கூட தனது தீவிரத்தை குறைக்கவில்லை. 

 

விஜய் சேதுபதி, வில்லத்தனத்தில் ஒரு புதிய முகத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அனிருத், என்ன ஒரு பின்னணி ஸ்கோர். ஆபத்துக்களை பெரிதாகவும் அதில் காப்பாற்றுபவர்களை மிக வலிமையாகவும் காண்பித்திருக்கிறார். இறுதியாக ரோலெக்ஸ் சார் மிரட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ், உங்கள் ரசிகரின் உற்சாகத்தை முழுமையாக பார்வையாளர்களுக்கும் கடத்திவிட்டீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 


 

சார்ந்த செய்திகள்