பிரபு, ஆரம்பக்காலக்கட்டங்களில் கதாநாயகனாக நடித்து வந்த பிரபு பின்பு குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்போதும் அதிலே பயணிக்கிறார். கிட்டதட்ட 220 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபு கடைசியா ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘பி.டி.சார்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அஜித்குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் ‘குட்-பேட்-அக்லி’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபு கடந்த 3ஆம் தேதி காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபு அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் வீக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரபுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்பு அவரது உடல்நிலை சீராகி நேற்று மாலை டிஸ்டார்ஜ் செய்யப்பட்டார். இப்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.