Skip to main content

திருமண நாளில் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு அன்னதானம்; அசத்தும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

nayanthara vignesh shivan food served 18000 child

 

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இன்று (9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறுகிறது. 

 

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு இருவரது சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளது. திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் தொலைபேசி எடுத்து வர கூடாது என்றும் அப்படி எடுத்து வந்தால் அதை பயன்படுத்தி எந்த விதமான புகைப்படமும் எடுக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கான மொத்த ஒளிபரப்பு உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் திருமணம் பற்றிய எந்தவிதமான புகைப்படமோ, வீடியோவோ வெளியே போய்விடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளதாம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். 

 

இத்திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கலா மாஸ்டர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இன்று மதியத்திற்கு மேல் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்