Skip to main content

"போனி கபூர்னா யாரு? எனக்கு தெரியாது.." - மிஷ்கினால் உறைந்த அரங்கம்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

mysskin about boney kapoor

 

எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் பிரியா தேவா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைனோசர்ஸ்'. ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது மிஷ்கின் பேசுகையில், "இந்த நிகழ்ச்சி ஒரு சினிமா நிகழ்ச்சி போல் இல்லை. ஒரு குடும்ப நிகழ்ச்சி போல் உள்ளது. நான் என்னுடைய அடுத்த படத்துக்கு கதை எழுதிக்கிட்டு இருக்கேன். இரண்டு நாள் முன்னாடி இந்த படக்குழு வந்தாங்க. அந்த டைரக்டர பார்த்தேன். அவன் முகத்துல சிகரெட் அடிக்கிற பழக்கம் தெரிஞ்சிச்சு. அப்பவே படம் ஹிட்டுன்னு சொல்லிட்டேன். நான் முதல் படம் பண்ணப்போ 1 நாளைக்கு 100 சிகரெட் அடிப்பேன். அதுவும் அஞ்சாதே படம் அப்போ 120 அடிப்பேன். அந்தளவுக்கு டென்ஷன் இருக்கும். அந்த டென்சன் இருந்தாதான் டைரக்டர். அதனால் இந்த படம் நல்ல ஹிட்டாகும்னு நினைக்கிறேன்.

 

நான் டிஸ்கஷனில் இருக்கும் போது என் தம்பி வந்து நிகழ்ச்சிக்கு போகணும் மணி ஆச்சு என்றான். நன் வர்லன்னு சொல்லிட்டேன். அப்புறம் போனி கபூர் நிகழ்ச்சி அண்ணானு சொன்னான். எனக்கு போனி கபூர்னா தெரியாதுடா என்றேன். நமக்கு தாணு-னா தெரியும். போனி கபூர்னா யாருன்னு தெரியாது. என் தம்பிக்கு போனி கபூர் எதோ ஒரு வகையில் நண்பர். ஆனா நான் நடிகை ஸ்ரீதேவியின் ரசிகன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை" என்றார். போனி கபூர் தெரியாது என மிஷ்கின் சொன்னவுடன் உறைந்து போன அரங்கம் பின்பு கலகலப்பானது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

“உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன்” - போனி கபூர் உறுதி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
boney kapoor about sri devi biopic

சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஸ்ரீ தேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற ஸ்ரீ தேவி குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.  

இந்த சூழலில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு கடந்த ஆண்டு புத்தகமாக வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த போனி கபூர், “அவர் எப்போதும் தனிப்பட்ட நபராகவே இருப்பார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்கட்டும். அதனால் அவரது பையோ பிக் உருவாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்றுள்ளார்.