Skip to main content

“முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்” - விளக்கிய ‘மர்மர்’ பட இயக்குநர்

Published on 26/02/2025 | Edited on 26/02/2025
Murmur director about his movie genre

எஸ்.பி.கே. பிக்சர்ஸ் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மர்மர். இப்படம் தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. மார்ச் மாதம் 7 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் பேசியதாவது, “மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம். 

அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்” என்றார். 
 

சார்ந்த செய்திகள்