லெபனான் நாட்டை சேர்ந்தவர் மியா கலிஃபா. பிழைப்பு தேடி அமெரிக்காவிற்கு சென்றார். அதன்பின் சிறிது காலம் பார்ன் சினிமா துறையில், பார்ன் நடிகையாக இருந்து விலகினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தை சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.
இந்நிலையில் லெபானான் நாட்டை பூர்வீகமாக கொண்ட மியா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தன்னுடைய பிரபல கண்ணாடியை ஏலம் விடுகிறார். தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.