Skip to main content

"எங்கே போனாலும் அவரைப் பற்றியே கேக்குறாங்க..." - சக நடிகரை புகழ்ந்த அதர்வா

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

 Mathagam  movie press meet - Atharva speech

 

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் டிடி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘மத்தகம்’ வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இந்நிலையில் மத்தகம் சீரிஸின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

 

இந்நிகழ்வில் நடிகர் அதர்வா பேசியதாவது, “மத்தகம் இப்ப ரிலீஸாகுது. ஆனா இது 2018, 19ல ஆரம்பிச்சது. கௌதம் மேனன் சார் தான், இயக்குநர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக் காரணம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தான். அவங்களுக்கு ரொம்ப நன்றி. பிரசாத் சார் இந்தக் கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷூட் பண்ணோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவேனா தெரிய மாட்டேனான்னு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேக்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட். அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர். அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்” என்றார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாலாஜி சித்தப்பா” - அதர்வா உருக்கம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
atharvaa condolence danieal balaji passed away

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா உள்ளிட்டவரகள் இரங்கல் தெரிவித்ததை அடுத்து தற்போது டேனியல் பாலாஜியின் அண்ணன் முரளியின் மகனும் நடிகருமான அதர்வா, “வாழ்வில் நமக்கானவர்கள்தான் மிகவும் முக்கியம் என நினைக்கவைத்த மற்றொரு நாள் இது. நாம் இன்னும் ஒன்றாக அதிக நேரம் செலவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன். ஆழ்ந்த இரங்கல் பாலாஜி சித்தப்பா” என குறிப்பிட்டுள்ளார். மேலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Next Story

முதல் முறையாக இணைந்த அதர்வா - அதிதி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
atharvaa aditi shankar movie update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம். ராஜேஷ் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி. ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற்போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.