தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1ஆம் தேதியில் சூரிய வழிபாடு, அடுத்த நாள் விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், தயாரிப்பு நிறுவனமான ‘தி ரூட்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் தலைமையில் இந்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், நடிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் அந்தோனி தட்டில், கதிர், கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘நீ பொட்டு வச்ச தங்க குடம்...’ என்ற பாடல் பின்னணியில் ஒலித்தப்படி சர்ப்ரைஸ் எண்ட்ரியாக விஜய் கலந்து கொண்டார். விஜய்யை தவிர அனைவரும் பானை உடைப்பு போன்ற விளையாட்டுகள் விளையாட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.