Skip to main content

இந்திய அளவில் முதலிடத்தில் மாஸ்டர்... வலிமை எந்த இடம் தெரியுமா?

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

master vs valimai

 

2020ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவுகள், ஹேஸ்டேக்குகள் குறித்த பதிவுகளை ட்விட்டர் இந்தியா வெளியிட்டு வருகிறது. அதில் அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக விஜய் நெய்வேலியில் தனது ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி உள்ளது. அதேபோல கர்ப்பமாக இருக்கும் அனுஷ்காவுடன் விராட் கோலி இருக்கும் புகைப்படம் அதிக லைக்குகள் பெற்ற இந்திய ட்விட்டர் புகைப்படமாக பதிவாகி உள்ளது. 

 

இந்நிலையில் இந்த ஆண்டின் அதிகமாகப் பதிவிடப்பட்ட திரைப்படங்களின் ஹேஸ்டேகுகள் குறித்து, ட்விட்டர் இந்தியா தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. 

 

அதில், விஜய் நடித்து அடுத்த வருடம் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படம் முதலிடத்திலும், பவன் கல்யாண் நடித்து வெளியாக இருக்கும் வக்கீல் சாப் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அஜித்தின் வலிமை, மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபாட்டா, சூர்யாவின் சூரரைப்போற்று பட ஹேஸ்டேகுகள் இடம்பிடித்துள்ளன.

 

இதன் காரணமாக இப்படங்களின் பெயர்களை ரசிகர்கள் போட்டாபோட்டியுடன் மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஸ்டரை போன்று ‘வாத்தி’க்கு வந்த சிக்கல் - முதல்வரிடம் கோரிக்கை

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

vaathi movie title issue

 

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

 

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இதனிடையே ஒன் லைஃப் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார்.  

 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாத்தி என்ற தலைப்பு ஆசிரியர்களை அவமதிக்கும் சொல்லாக இருக்கிறது. உடனே தலைப்பை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

 

இதே போல் விஜய் ஆசிரியராக நடித்து வெளியான 'மாஸ்டர்' படத்திற்கும் தலைப்பு தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இப்படத்தின் தலைப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு, ‘தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களைத் தனது படங்களில் தலைப்பாக வைப்பதன் மர்மம் என்னவோ’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அஜித் படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Complaint against Ajith's valimai film crew in the commissioner's office

 

இயக்குநர் அ.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'வலிமை'. அப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. 

 

இப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், ராஜேஷ் ராஜா என்ற குறும்பட இயக்குநர், ‘வலிமை’ படக்குழு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வலிமை படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2019 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான 'தங்க சங்கிலி' என்ற குறும்படத்தில் இடம்பெற்ற 10 காட்சிகள் போல் உள்ளதாகக் கூறியுள்ளார்.  

 

மேலும், ராஜேஷ் ராஜா இதற்கு முன்பு அ.வினோத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தும், அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தனது பிரச்சினைக்கு தீர்வு காண இறுதியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அணுகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.