இயக்குநர் சுதா கொங்கரா அக்ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து மீண்டும் சூர்யவை வைத்து புறநானுறு என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவிருந்தார். ஆனால் இப்படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யாவிற்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவிருந்து தற்போது புதிய நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிகின்றன.
இந்த நிலையில் இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷை சந்தித்து சுதா கொங்கரா பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் நிலையில் ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.