66வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியிலுள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் பங்குபெற்றனர். பொதுவாக தேசிய விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் வழங்குவதுதான் வழக்கம். ஆனால், குடியரசுத் தலைவர் புதுச்சேரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதால் அவருக்கு பதிலாக துணை குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.
விருதுகளை பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கின்றார். இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்று நடைபெற்ற விழாவில், மகாநடி என்னும் தெலுங்கு படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.