![bdhdssdbsbs](/modules/blazyloading/images/loader.png)
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிக்பாஸ்' புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், ‘வத்திக்குச்சி’ படப்புகழ் திலீப், 'பாகுபலி' பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார்.
சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ.பி. ரவி பணியாற்றுகிறார். 'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (16.07.2021) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.