Skip to main content

“இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை” - காளி வெங்கட்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
kali venkat speech at vike taxi movie event

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் கே.எம். இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் படம் 'பைக் டாக்சி'. இப்படத்தில் வையாபுரி, காளி வெங்கட் முதலான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைக்கிறார் 

இப்படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். அப்போது காளி வெங்கட் பேசியதாவது, “இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை. ஆனால் நான் பூஜைக்கு வந்துவிட்டேன். ஆனால் முன்னமே இயக்குநர் எனக்குக் கதை சொன்னார், மிகச் சுவாரஸ்யமான கதை. எனது ரோல் அருமையாக இருந்தது. வையாபுரி அண்ணாவுடன் நடிப்பது மகிழ்ச்சி” என்றார். 

வையாபுரி பேசியதாவது, “எங்களை வாழவைக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நான் இப்படத்தில் அப்பா கதாபாத்திரம் செய்கிறேன். அப்பா என்றாலே சிறு நடுக்கம் வரும், அப்பா என்றாலே தானாகப் பொறுப்பு வரும், ஆனால் அப்பாவை விட இப்படத்தில் நாயகி நக்ஷாவிற்கு அதிக பொறுப்பு உள்ளது. இயக்குநர் கதை சொன்ன போதே அழுதே விட்டேன். அத்தனை உருக்கமாக இருந்தது. லைசென்ஸ் படத்தில் ஒரு நாள் மட்டுமே நடித்தேன். இயக்குநர் பேசக்கூட மாட்டார். இவர் ஒழுங்காகக் கதை சொல்வாரா? என்று நினைத்தேன், மிரட்டிவிட்டார். நாயகிக்கு  மிக அழுத்தமான பாத்திரம், புதுமுக நாயகி ஓகேவா எனக் கேட்டேன், உங்களுக்கு மகளாக இவர் தான் சரியாக வருவார். அவரை வைத்து இரண்டு காட்சிகள் எடுத்தேன் எனக் காட்டினார், அதைப் பார்த்தேன். அற்புதமாக நடித்துள்ளார் வாழ்த்துகள். ரெஹனா மேடம் இசையில் நடிப்பது மகிழ்ச்சி. லைசென்ஸ் படம் வெற்றிப்படமாக இல்லையென்றாலும், அடுத்த பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"திக்குமுக்கு ஆடுற அளவிற்கு கொண்டாடுறீங்க" - காளி வெங்கட் நெகிழ்ச்சி

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

kali venkat thanks note for his character appreciation for aneethi movie

 

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் 'அநீதி'. இப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. 

 

இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காளி வெங்கட் நடிப்பை பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் நன்றி தெரிவித்து காளி வெங்கட் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "தங்கப்பிள்ளை கதாபாத்திரத்தை பயங்கரமாக திக்குமுக்கு ஆடுற அளவிற்கு எல்லாரும் கொண்டாடுறீங்க. அதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் சாருக்கும், ஷங்கர் சாருக்கும் நன்றி. 

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பேராதரவு. எல்லா படங்களுக்கும் கொடுப்பது மாதிரி தான். ஆனால் இந்த படத்துக்கு பல மடங்கு அதிகமாக கொடுத்துருக்கீங்க. சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரின் விமர்சனத்தை படிக்கும் போது மற்றும் ஃபோனில் அழைத்து பேசியவர்களின் உணர்வையும் கேட்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன திருப்பி கொடுக்கிறது என்று தெரியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

"எங்கள் நைனாவின் மறைவு உலகத்தமிழ் வாசகர்களின் பேரிழப்பு" - கி.ரா -வுக்கு காளி வெங்கட் இரங்கல்!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021
vsdgsdgsd

 

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்குச் சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை காரணமாக சிகிச்சையிலிருந்த நிலையில், தமது 99வது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் காளி வெங்கட் இரங்கல் தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

fddfgb

 

"எங்கள் நிலப்பரப்பையும்,வட்டாரவழக்கையும், தன் எழுத்தின் மூலம் உலகறியச் செய்த எங்கள் நைனா முதுபெரும் எழுத்தாசான் “கி.ரா” அவர்களின் மறைவு உலகத்தமிழ் வாசகர்களின் பேரிழப்பு #ஆழ்ந்தஇரங்கல்" என பதிவிட்டுள்ளார்.