Skip to main content

நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் ஜான்வி கபூரின் படம்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

gunjan saxena


கடந்த மூன்று மாதங்களாக கரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் திரையுலகம் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் மீண்டும் திரையரங்குகள் திறப்பதற்குப் பல மாதங்களாகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் முடிக்கப்பட்ட படங்களை நேரடியாகத் தங்களது தளத்தில் வெளியிட ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
 


அந்த வகையில், தற்போது இந்திய விமானப் படையில் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குன்ஜன் சக்ஸேனாவாக நடித்திருக்கும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. முன்னதாக, ஏப்ரல் 24-ஆம் தேதி அன்று இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
 

 


இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தைப் பற்றிய ஒரு காணொலியைப் பகிர்ந்து, விரைவில் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று பகிர்ந்துள்ளது.

சரண் சர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், 1999-ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனாவைப் பற்றியது. போரின்போது தீரமாகச் செயல்பட்டதற்காக ஷௌர்ய வீர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பான் இந்தியா படம் - சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jhanvi kapoor to play opposite for suriya in karna movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இப்படம் பான் இந்திய படமாக இரண்டு பாகங்களில் உருவாவதாகவும் மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பொங்கல் பண்டிகை; ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
New update of 'Vidamuyarchi' movie

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.