Skip to main content

ஜெயலலிதா பயோபிக்கிற்காக தான் பட்ட கஷ்டங்களை பதிவிட்ட கங்கனா! 

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

kangana ranaut

 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’யில் கங்கனா ரனாவத் நாயகியாக நடித்து வருகிறார். ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அதன்பிறகு தற்போதுதான் தமிழில் எண்ட்ரீ கொடுத்திருக்கிறார்.

 

இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்க, கங்கனாவுடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லாக்டவுனால் இப்படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது. தற்போது ஷூட்டிங் எடுக்க அனுமதி கிடைத்தவுடன், ஷூட்டிங்கை தொடங்கியுள்ளது படக்குழு.

 

இந்நிலையில் இப்படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டியுள்ளார் கங்கனா. இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் குறித்து ட்விட்டரில் பதிவிடுகையில், “இந்திய திரையில் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக நான் நடித்தேன். சிறியதாகவும் அதே சமயம் வலிமையுடனும் இருக்கும் என் அரிய உடலமைப்புக்கு நன்றி. 30 வயதுக்குப் பிறகு 'தலைவி' படத்துக்காக நான் 20 கிலோ உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது, பரதநாட்டியம் ஆட வேண்டியிருந்தது. இதனால் எனது முதுகில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிப்பதை விட வேறெதுவும் பெரிதாகத் திருப்தியளிக்காது.

 

மீண்டும் பழைய நிலைக்கு என் உடலைக் கொண்டு வரும் பயணம் எளிமையாக இல்லை. நான் நன்றாக உணர்கிறேன். ஆனால், ஏழு மாத பயிற்சிக்கு பிறகும் என்னால் பழைய திடத்துக்கு, வேகத்துக்கு திரும்ப முடியவில்லை. இன்னும் 5 கிலோ இறங்க மாட்டேன் என்கிறது. சில நேரங்களில் விரக்தியாக இருக்கும். ஆனால் என் இயக்குநர் விஜய், ‘தலைவி’ காட்சிகளைக் காட்டும்போது எல்லாம் சரியாகிவிடும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனுடன் தலைவி படத்திற்காக உடல் எடை கூடிய புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்