Skip to main content

540 கோடி வாங்கிய அயர்ன் மேன்...

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

கடந்த வருடம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் வெளியான பின்பு அனைவரும் தானோஸை பற்றி பேசாமல் இல்லை. மீம்ஸ் தொடங்கி வீடியோக்கள் வரை தானோஸ் என்ற வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. உலகையே காப்பாற்றிய அவெஞ்சர்ஸ் டீமையே அடித்து நொறுக்கினால் யார்தான் தானோஸை பற்றி பேசாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட தானோஸிடம் இருந்து உலகை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்பதுதான் அவெஞ்சர்ஸ் எண்ட கேம் படத்தின் கதை.
 

iron man


உலகில் பலரும் ஏப்ரல் 26ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருந்திந்தார்கள்.  அவெஞ்சர்ஸ் டீம் தானோஸை அழிக்கிறார்களா? இல்லை மீண்டும் தோல்வியை தழுவுகிறார்களா? என்கிற கேள்விகளுக்கு இந்த எண்ட் கேம் படத்தில்தான் விடை தெரிந்தது. ஹாலிவுட் படமாக இருந்தாலும், அனைத்து மொழி பேசும் மக்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி வசூலை வாரிக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. 

 
இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சாதனை படைத்துள்ளது இப்படம். குறிப்பாக இந்தியாவில் ஒரு நாளுக்கு பத்தலட்சத்திற்கு மேலான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. நொடிக்கு 16 டிக்கெட்டுகள் என்ற வீதம் விற்று தீர்ந்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் என்று பார்த்தால் 169 மில்லியன் வசூல் செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 1,186 கோடி. இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருந்ததாக சொல்லப்பட்டது.
 

devarattam


தற்போது உலகம் முழுவதும் 9000 கோடி வசூல் வரை செய்துள்ளதாகவும் மேலும் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் முக்கிய நாயகன் அயர்ன் மேன்தான், மார்வெல் காமிக்ஸ் படமாக எடுக்க இருந்தபோது உதவினார். அவர்தான் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். அவஞ்சர்ஸில் நடித்த ஹீரோக்களில் ராபர்ட் டௌனிதான் அதிகமாக சம்பளம் வாங்கியவர். இந்த கடைசி பாகத்திற்கும் அதிக சம்பளம் வாங்கியவரும் அவர்தான். எவ்வளவு தெரியுமா சுமார் 540 கோடி என்று சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்