Published on 19/11/2022 | Edited on 19/11/2022
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஹிரித்திக் ரோஷன் கடந்த 2000ஆம் ஆண்டு சுஷானேனை திருமணம் செய்து கொண்டார். பின்பு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் நடிகை மற்றும் பாடகி ஷபா ஆசாத் என்பவரை சமீப காலமாக காதலித்து வருகிறார். இருவரும் வெளியில் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மும்பையில் மூன்று மாடிகள் கொண்ட ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடு ரூ.100 கோடி என்று சொல்லப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப் முறையில் இருக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.