இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் குட்-பேட்-அக்லி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிளாக் மெயில் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். இதில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு பகிர்ந்துள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.