சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டான்'. இப்படம் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடுகிறது. இதனை அடுத்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்.கே 20' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ் புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'எஸ்.கே 20' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (09.06.2022) வெளியாகவுள்ளது. காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.