Skip to main content

சர்ச்சையான கருத்து; சாய் பல்லவிக்கு திமுக எம்.எல்.ஏ ஆதரவு

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

dmk mla trb  rajaa support sai pallavi controversy speech

 

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் இணைந்து  விரத பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படம் நேற்று (17.8.2022) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்"  என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தாலும் இந்து அமைப்பினர் மற்றும் நடிகை விஜய் சாந்தி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா நடிகை சாய் பல்லவியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள ட்விட்டர் பதிவில், "சிலர் சாய் பல்லவியைக் கண்டித்துப் பதிவிடுவதைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவர்களின் இந்த தாக்குதலில் இருந்து ஜனநாயகம் தப்பிப் பிழைக்க வேண்டும். நமது இளைஞர்கள் இது போன்ற விஷயங்களுக்கு அடிமையாகாமல் மனதில் பட்டதைத் தைரியமாகப் பேச வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு புதிய சாதனை படைக்கும்” - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கை

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Tamil Nadu will set a new record in electronics exports says tRb raja

மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இது மேலும் மார்ச் மாதத்திற்குள் 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும் எனத் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீட்டு மாநாடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதன் காரணமாக ஒரு தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசின் தொழில்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கிடும் தமிழ்நாடு தொடர்ச்சியாக இந்நிலையை உறுதிப்படுத்தி வருகின்றது.

மின்னணுவியல் ஏற்றுமதி தற்போது 7.37 பில்லியன் டாலரை அடைந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 22.65 பில்லியன் டாலர் எனும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 32.52 சதவிகிதம் ஆகும். முந்தைய நிதியாண்டில் (2022-2023) மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 5.37 பில்லியன் டாலர் ஆகும். இந்தத் தரவுகளை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் அதாவது 2023-24 இல் 10 மாத காலகட்டத்திற்குள்ளாகவே 7.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர் எய்தி புதிய சாதனை படைக்கும்.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் குறிப்பாக மின்னணு பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றால் அதற்குப் பல காரணிகள் உள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், முனைப்பான ஆளுமை, கொள்கை சார்ந்த அணுகுமுறை, வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகம், உற்பத்தி மற்றும் துல்லியப் பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு இத்தகைய அபார வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டுள்ளது.

Tamil Nadu will set a new record in electronics exports says tRb raja

இந்த அபரிமிதமான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் இத்துறையில் கொட்டிக் கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது. தமிழ்நாடு குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் இத்துறையின் வளர்ச்சியை நன்கு துரிதப்படுத்தி 2 இலட்சம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதே, இந்தக் கொள்கையின் உயரிய நோக்கமாகும். பல்வேறு துறை சார்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியாக நல்லுறவுகள் மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. மிகச் சிறந்த மனித வளம், அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் அமைந்துள்ள சிறப்பான சூழலமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வலுவான அம்சங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சாதனையைப் பற்றி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், “இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அளித்து வரும் பெரும் பங்கினை இந்தச் சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், உற்பத்திக்கான பிரதான முதலீட்டு மாநிலமாகவும் இளைஞர்களுக்கு உயர்தர வேலைகளை உருவாக்குவதற்கான மையமாகவும் தமிழ்நாடு பிரகாசமாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வது மட்டுமின்றி எங்களின் தொழில் வளர்ச்சிப் பாதையில் மேலும் மேலும் புதிய சாதனைகளை உருவாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“இதான் என் முகம்” - உண்மைச் சம்பவக் கதையில் மேஜராக சிவகார்த்திகேயன்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
sivakarthikeyan rajkumar periyasamy movie amaran update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்குத் தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. மேலும் இந்த கதாபாத்திரத்திற்காக ஹேர்ஸ்டைல் மாற்றியிருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின் வெளியாகும் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘அமரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் வருகிறார். பயங்கரவாதிகளைத் தாக்க தனது டீமுடன், “இந்த ஆபரேஷனுக்கு எவனும் உன் முகத்த மூடாத. இதான் என் முகம், இந்தியன் ஆர்மியோட முகம்னு அவனுக்கு காட்டு” என வீரியமாக  அவர் பேசும் வசனங்கள் இடம் பெறுகிறது. 

இதுபோன்று தனது குழுவிற்கு தைரியம் கொடுக்கும் வகையில் அவர் பேசும் பல வசனங்கள் டீசர் முழுவதும் இருக்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன், “மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.