Skip to main content

"சந்தோஷமா இருந்தாலும் கொஞ்சம் ஓவரா இருக்கோ என்றும் தோனுச்சு" - மகான் பட அனுபவம் பகிரும் துருவ் விக்ரம்

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

Dhruv Vikram

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ருவ் விக்ரம் மகான் பட அனுபவம் குறித்து நக்கீரனுடன் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"சிவாஜி சார், பிரபு சார் இணைந்து நடித்த சங்கிலி படம் பார்த்திருக்கிறேன். அதுபோக அப்பா, மகன் இணைந்து நடித்த சில தெலுங்கு படங்களும் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் அவை மாதிரி இருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் படத்தில் இணைந்து நடித்தால் என்னவெல்லாம் இருக்கும் என்று மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்குமோ அவை எதுவும் இந்தப் படத்தில் இருக்காது. 

 

படம் பற்றி என்னை டேக் செய்து நிறைய மீம்ஸ்கள் பாசிட்டிவாக வந்தன. அதை பார்க்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அப்பா மாதிரி என்னால் அவ்வளவு கெட்டப் மாற்றியெல்லாம் நடிக்க முடியாது என்பதால் சில மீம்ஸ்கள் கொஞ்சம் ஓவரா இருக்குற மாதிரியும் தோன்றியது. படத்தில் எனக்கும் சில சின்னச்சின்ன கெட்டப்கள் இருக்கும். அதை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது.   

 

இந்த மாதிரி படங்களில்தான் நடிக்க வேண்டாம், இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். அப்பாவும் நானும் இணைந்து நடித்தபோது அவர் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார், என் கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன். அப்பா எப்படி நடிக்கிறார் என்பதை கூர்ந்து கவனித்ததில்லை. டப்பிங்கில் பார்க்கும்போது அப்பா இப்படியெல்லாம் நடித்திருக்கிறார், நாம் கவனிக்கவில்லையே என்று நினைத்தேன். ரஃப் ட்ராக்ல அப்பாவுக்கு நான்தான் டப்பிங் பண்ணேன். அப்பா நடித்த காட்சிகளை மறுஉருவாக்கம் செய்வது ரொம்பவும் கடினமாக இருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் சுமாராகத்தான் செய்ய முடிந்தது. அப்பாவுடைய நடிப்பை நான் எப்போதும் ரசிப்பேன். இந்தப் படத்தில் வித்தியாசமான நடிப்பை நீங்கள் பார்ப்பீர்கள். 

 

அப்பாவோடு வெளியே செல்லும்போது இரண்டு பேரும் அண்ணன், தம்பி மாதிரி இருக்குறீர்கள் என்று சிலர் சொல்லிருக்காங்க. சிலர் அப்பா என்னைவிட இளமையாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்".   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மைல் கல் என்பதில் சந்தேகமே இல்லை” - அடுத்த பட அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
mari selvaraj next movie update

விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதை தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் அனுபமா பரமேஷ்வரன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியதாகவும் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசுகையில், “பரியேறும் பெருமாள், பா. ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும். திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.

Next Story

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இரண்டு கதாநாயகிகள்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
anupama parameshwaran dharshana rajendran in mari selvaraj dhruv vikram movie

விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில் விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில் மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதை தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

anupama parameshwaran dharshana rajendran in mari selvaraj dhruv vikram movie

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனுபமா பரமேஷ்வரன் கடைசியாகத் தமிழில் ஜெயம் ரவியின் சைரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தர்ஷனா ராஜேந்திரன் 2018 ஆம் ஆண்டு வெளியான விஷாலின் இரும்புத் திரைப்படத்தில் நடித்திருந்தார்.