
தமிழ் சினிமாவில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் பிந்துமாதவி. இவர் தற்போது இயக்குநர் அனிஷ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை பிந்து மாதவி அடுத்ததாக சார்லஸ் இயக்கும் நாகா படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்த், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே. முருகன் தயாரிக்கும் இப்படத்தில் பிந்து மாதவி அம்மன் பக்தையாக நடிக்கவுள்ளாராம். இதற்காக அவர் சைவ உணவுகளை தவிர்த்துவிட்டு விரதம் இருந்து நாகா படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.