Skip to main content

"இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே வெற்றிதான் மச்சான்" - பால சரவணன் வாழ்த்து! 

Published on 02/09/2020 | Edited on 02/09/2020
gdsgds

 

 

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பும், வெற்றியையும் பெற்றது. இப்படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் கலையரசன், அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் பால சரவணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

"மாபெரும் மகிழ்ச்சிகளும் நன்றிகளும் பா.ரஞ்சித் சார்... என் அன்பு மச்சான் கலையரசன் #குதிரைவால் title & First look மிக தரம். மிக சிறப்பு. இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே வெற்றிதான் மச்சான்...வாழ்த்துக்கள் #குதிரைவால் team" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்