Skip to main content

'காந்தாரா' பட உண்மை நிகழ்வில் கலந்து கொண்ட அனுஷ்கா

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

anushka shetty attend bootha gola function in  Mangaluru

 

நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாகத் தமிழில் 'பாகமதி' படம் வெளியானது. கடந்த 2018 ஆம் இப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு பெரியளவில் எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. இப்போது தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அனுஷ்கா மங்களூரில் நடந்த ‘பூத கோலா' விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பூத கோலா நிகழ்வு 'காந்தாரா' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. காந்தாரா படம் கர்நாடக மக்களின் தெய்வ வழிபாடான பூத கோலா நிகழ்வை மையப்படுத்தி உருவாகியிருக்கும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனுஷ்காவின் சொந்த ஊர் மங்களூர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

காந்தாரா படம் வெளியான சமயத்தில், படக்குழுவினரையும்  ரிஷப் பி ஷெட்டியையும் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுஷ்கா பதிவிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முழுவதும் என்.ஐ.ஏ வசமான மங்களூர் சம்பவ வழக்கு; உதகை உடற்கல்வி ஆசிரியரிடம் தீவிர விசாரணை

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

 Mangalore incident case in full possession of NIA; A serious inquiry into the physical education teacher

 

கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில்,கர்நாடக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ விசாரணை வேண்டும் என இன்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த வழக்கு முழுவதுமாக என்.ஐ.ஏ வசம் சென்றுள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் குற்றவாளியான முகமது ஷெரீக் என்பவருக்கு உதகையை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தர் என்பவர் சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இரண்டாவது நாளாக உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தரிடம் மங்களூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

Next Story

ஷெரீக்கும் ஜமேசா முபீனும் சந்தித்துக்கொண்டனரா? - துப்பு துலக்கும் கேரள போலீசார்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Did Sherik and Mubeen meet?- Kerala police searching for clues

 

கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், தேசிய புலனாய்வுத் துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஷெரீக் என்பவரின் மீது வெடிகுண்டு தயாரிப்பதற்காக வெடி பொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்தது, அதேபோல் தேசியக் கொடியை எரித்தது, நாட்டுக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய குறிப்புகளை வைத்திருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு ஏற்கனவே கர்நாடக காவல்துறை ஷெரீக் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது முதல் தகவல் அறிக்கையின் வாயிலாகத் தெரிய வந்தது.

 

அண்மையில் தமிழகத்தின் கோவையில் அக்டோபர் 23ஆம் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபீன் என்ற நபர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. கோவை கார் வெடிப்பில் பலியான முபீனும் மங்களூர் குக்கர் வெடிகுண்டு குற்றவாளி ஷெரீக்கும் ஒரே நேரத்தில் கேரளாவில் இருந்துள்ளது தெரியவர, இருவரும் சந்தித்துக் கொண்டனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கேரள காவல்துறை தீவிரவாத தடுப்பு குழு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

VV

 

மங்களூர் குற்றவாளி ஷெரீக் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கோவையில் இருந்துவிட்டு பின்னர் மதுரை, நாகர்கோவில் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல் ஷெரீக் செப்டம்பர் 13 முதல் 18ஆம் தேதி வரை கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஆலுவா பகுதியில் இருந்தது தெரிய வந்துள்ளது. கோவையில் அக்டோபர் 23ஆம் தேதி கார் வெடிப்பில் உயிரிழந்த முபீனும் செப்டம்பர் மாதம் மத்தியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஷெரீக் கோவையில் இருந்த பொழுது முபீனை சந்திக்கவில்லை என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கேரளாவில் இவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பிருக்குமோ என்ற கோணத்தில் கேரள காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

மங்களூர் சம்பவத்திற்கு 'இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.