Skip to main content

அண்ணாத்த பட அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

Annaatthe First Single

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தைத் தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி திரைக்குக் கொண்டுவரும் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்