Published on 22/05/2021 | Edited on 22/05/2021
கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்துவரும் நிலையில், தயாரிப்பாளர், இயக்குநர், மூத்த நடிகை ஜெயசித்ரா அவர்கள் 1000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற வீட்டிற்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கி உதவினார். இதைத் தொடர்ந்து அவர் பேசும்போது... "கலை உறவுகள் கவலைப்படாமல் தைரியமாக, சந்தோஷமாக இருங்கள். விரைவில் நல்லது நடக்கும். எல்லோருக்கும் ஒரு நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும். அனைத்துப் பிரச்சினைகளும் நடிகர் சங்கம் மூலம் தீர்க்கப்படும். நடிகர் சங்கம் உங்கள் தாய் வீடு" என கூறினார்.