Skip to main content

சன்னிலியோன் இமேஜை இந்தப் படம் மாற்றும்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
quotation gang movie trailer

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நடிகை ப்ரியாமணி பேசியதாவது "இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்தக் கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள்.

quotation gang movie trailer

எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்

இந்நிகழ்வில் நடிகை சன்னி லியோன் பேசியதாவது, "இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் நிகழ்ச்சி 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
sunny leone show will telecast in tamil

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றான  ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.

Next Story

போலீஸ் தேர்வு எழுத உத்தரப் பிரதேசம் வந்த சன்னி லியோன்?

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.