உலக நாடுகளை உலுக்கிய நேபாள அரச குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
நேபாள அரச குடும்பத்தில் ஷா வம்சத்தில் வந்த தீபேந்திர ஷா என்ற பட்டத்து இளவரசர், தன் உறவினர்களை அழைத்து விருந்து வைத்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தி பிறகு இராணுவ உடையுடன் வந்து தனது அப்பாவும் மன்னருமான பிரேந்திர ஷா முன்பு மிஷின் கன்னை எடுத்து வந்து நின்றார். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
தீபேந்திர ஷா, மன்னர் பிரேந்திர ஷா முன்பு வந்து அவரை பார்த்து சுட ஆரம்பித்தார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் திகைத்துப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். முதலில் மன்னரை காப்பாற்றுவோம் என்று அருகில் இருந்தவர்கள் மன்னரை நோக்கி சென்றுள்ளனர். பிறகு மீண்டும் தனது அறைக்கு சென்ற தீபேந்திர ஷா அங்கிருந்த பிஸ்டல் மற்றும் எம்.16 துப்பாக்கியை எடுத்து வந்து உறவினர்கள் மற்றும் தனது அம்மா, தம்பி, தங்கை என அனைவரையும் சுட ஆரம்பித்தார். சுப்பாக்கி சூட்டில் சிதறி ஓடிய அவரது குடும்பம் உட்பட 17 பேரை சுட்டுள்ளார். இந்த சம்பவம் ஒரு புறம் நடக்க அரண்மனை காவலில் இருந்தவர்கள் தீபேந்திர ஷா உறவினர்கள் முன்பு துப்பாக்கிகளை வைத்து சாகசம் செய்துகொண்டுடிப்பதாக நினைத்து அரண்மனைக்குள் செல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு தீபேந்திர ஷாவின் துப்பாக்கி சூட்டிலிருந்து அரண்மனை ஜன்னல் வழியாக தப்பித்து வந்த ஒரு நபர், அரண்னைக்கு வெளியே உள்ள காவலாளிகளை சந்தித்து உள்ளே நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதன் பிறகு அவர்கள் வந்து தடுத்து நிறுத்துவதற்குள் தீபேந்திர ஷா தன்னையே சுப்பாக்கியால் சுட்டுக்கொண்டான். பின்பு காயமடைந்த அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் ஏற்கனவே அதில் 9 பேர் இறந்துவிட்டதாக கூறினர். அதன் பிறகு மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் தீபேந்திர ஷா கோமாவுக்கு செல்கிறார். கோமாவில் இருக்கும்போது தீபேந்திர ஷா அடுத்த அரசராக முடிசூடுகின்றனர் அதன் பிறகு அவரும் 4 நாட்களில் இறந்து விடுகிறார். இந்த சம்பவத்தில் விருந்துக்கு வராதா அவரது மற்றொரு சித்தப்பா ஞானேந்திரா ஷாவும் விருந்துக்கு வந்த இவரின் குடும்பம் மட்டும் உயிருடன் இருகின்றனர்.
அதன் பிறகு ஞானேந்திரா ஷா மன்னராக ஆகிறார். அவரிடம் இதைப்பற்றி முதற்கட்டமாக போலீஸார் விசாரித்தபோது துப்பாக்கி பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்து இருப்பதாக கூறியிருக்கிறார். அங்குள்ள மக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது. தீபேந்திர ஷாவின் சித்தப்பா ஞானேந்திரா ஷா இதற்காக திட்டமிட்டு அவரை கொன்றுவிட்டு அவரது குடும்பத்தையும் கொன்று விட்டதாக சில வதந்திகளை சொல்லியிருக்கின்றனர். ஆனால் ஞானேந்திரா ஷா ஆட்சி பெரிதும் மெச்சிக்கொள்ளும் அளவிற்கு இல்லாமல் இருந்துள்ளது. ஞானேந்திரா ஷாவின் ஆட்சியின்போது வந்த மாவோயிஸ்டுகள் தங்களுக்கு மன்னராட்சி முறை வேண்டாம் என்று மக்களாட்சி முறையில் போட்டியிட்டு வென்றுள்ளனர். அதோடு 2008ஆம் ஆண்டில் ஞானேந்திரா ஷா ஆட்சி முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் அவரது பையன் பரசு தாய்லாந்தில் போதை பொருள் விற்று சிறையில் இருந்து வந்தான். மேலும் போதைக்கு அடிமையாகி சிறையிலிருந்து மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டிருந்தான்.
இதற்கிடையில் தீபேந்திர ஷாவின் காதலி தேவயானி ராணா மீண்டும் லண்டனுக்கு சென்று இரண்டாவதாக ஒரு எம்.ஏ. டிகிரி வாங்கி மிகப்பெரிய தனியார் தொழில் நிறுவனத்திற்கு வைய்ஸ் பிரசிடண்டாக ஆனார். அதன் பிறகு மன்னர் குலத்தை சேர்ந்த யுவராஜ் என்பவருடன் திருமணமாகி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தீபேந்திர ஷா அந்த பெண்ணை நினைத்து கோபப்பட்டு இவ்ளோ பிரச்சனை செய்ததில் அவருடைய குடும்பமே அழிந்துவிட்டது. முன்பு பிரித்விராஜ் ஷா மன்னரிடம் சன்னியாசி சொன்னதுபோல தீபேந்திர ஷா 11 மன்னராக முடிசூட்டப்பட்டு இறந்துவிட்டதாக நேபாள மக்கள் நம்பி வருகின்றனர்.