
முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்
ஒரு 27 வயது பையன் என்னிடம் வந்து அழுது, ஒரு பெண்ணும் தானும் காதலித்ததாக கூறினான். இவரும் சேர்ந்து பதிவு திருமணம் செய்யும் அளவிற்கு முடிவெடுத்து விட்டனர். ஆனால் திடீரென அந்த பெண் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். இதை அந்த பையன் தன் நண்பர்கள் மூலம் விசாரித்ததில், வேறு சாதியில் கல்யாணம் செய்துகொண்டால் தான் செத்துப்போய் விடுவதாக அந்த பெண்ணின் அப்பா மிரட்டியது தெரியவந்தது.
இப்போது நான் ஒரு டிடெக்டிவ்வாக என்ன பண்ண வேண்டும் என அந்த பையனிடம் கேட்டபோது, அதற்கு அவன், தன் கண்ணைப் பார்த்து அந்த பெண் ஒரு முறை பேசினால் தன்னுடன் வந்துவிடும் என்று கூறினான். நானும் சரி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து அந்த பையனுக்கு சில அறிவுரைகளைக் கூறினேன். அதன் பிறகு அந்த பெண்ணை ஒரு பொதுவான இடத்திற்கு வரச் சொல்லி இந்த பையனை பேச வைத்தோம்.
அந்த பெண் இவனிடம், தெளிவாக உனக்கும் எனக்கும் செட் ஆகாது என்றும், உன் வேலையை பார் நான் என் வேலையை பார்க்கப்போகிறேன் என்றும் சொல்லி விட்டது. மேலும் அவனிடம் பதிவு திருமணம் செய்திருந்தால் இன்னும் பல சம்பங்கள் நடந்திருக்கும். அதனால் பிரிந்ததை நல்லது என்று நினைத்துக்கொண்டு கடந்து செல்வோம். என்று முகத்தை பார்த்து சொல்லிவிட்டு சென்றதுவிட்டது.
அதன் பிறகு அந்த தம்பியை அழைத்து இது தான் நிதர்சனமான உண்மை அதை கொஞ்சம் நீ புரிந்துகொள் என்று அறிவுரையை வழங்கினேன். அதற்கு அவன் கஷ்டமாகத் தான் இருக்கிறது என்றான். அதன் பின்பு அவனுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் கொடுத்து உனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தால் என்னிடம் வந்து பேசு என்று எனது நம்பரைக் கொடுத்து அனுப்பி வைத்தோம். சில இளைஞர்கள் தாங்களாகவே காதல் குறித்த எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். யதார்த்தத்தினை புரிந்து கொள்ளாமல் கற்பனையில் இருப்பார்கள். அவர்களுக்கு நிஜம் புரிய வரும் போது ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தவிப்பார்கள்.