Published on 15/08/2020 | Edited on 15/08/2020

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்துள்ளார். தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த தோனி, தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கிரிக்கெட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்பு மிகப்பெரியது. என் வாழ்வில் சிறந்த தருணம் 2011 கோப்பையை வென்றது. உங்கள் இரண்டாவது இன்னிங்சிற்கு எனது வாழ்த்துக்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.