Published on 26/10/2020 | Edited on 26/10/2020
![Virat Kohli](http://image.nakkheeran.in/cdn/farfuture/tTi-lOTuq0uVMK2uSmYzZ8-QkskYSHkP1uP3x3GOsKQ/1603693048/sites/default/files/inline-images/virat-kohli-batting_0.jpg)
13-ஆவது ஐபிஎல் தொடரின் 44-ஆவது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதின. இப்போட்டியில், சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, 43 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 50 ரன்கள் குவித்தார்.
விராட் கோலி அடித்த இந்த சிக்ஸரானது, ஐபிஎல் வரலாற்றில் அவரது 200-ஆவது சிக்ஸராக பதிவாகியுள்ளது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்கள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார்.
விராட் கோலி, 200 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார். தோனி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் முன்னரே இந்த பட்டியலில் உள்ளனர்.