இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயானமுதலாவது ஒருநாள் போட்டி, புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்துகளமிறங்கிய இந்திய அணியில் தவான் சிறப்பாக ஆடி 98 ரன்களும், விராட் கோலி அரைசதமும்அடித்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுலும், க்ருனால் பாண்டியாவும்சிறப்பாகஆடி ரன்களைகுவித்தனர். தனதுமுதல் சர்வதேச ஒருநாள்போட்டியில் ஆடிய க்ருனால் பாண்டியா, 31 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். கே.எல். ராகுல் மற்றும் க்ருனால் பாண்டியா இருவரின் ஆட்டத்தாலும் இந்திய அணி 317 ரன்களைகுவித்தது.
இந்திய இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேசுவதற்கு வந்த க்ருனால் பாண்டியா, உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் தவித்தார். கண்ணீர் சிந்திய அவர், ஓரளவிற்கு அதனைக் கட்டுப்படுத்திக்கொண்டு, "இதனைஎனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்" எனத் தெரிவித்தார். க்ருனால் பாண்டியாவின்தந்தை, இந்த வருடத்தின் தொடக்கத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.