Skip to main content

அது புதிரான ஒன்று... ஆனால் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது! - விராட் கோலி!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

virat kohli

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி 161 ரன்களைக் குவித்தது.

 

இதனைத் தொடர்ந்து, ஆடிய ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை, நடராஜனும், ஜடேஜாவிற்கு மாற்று வீரராக இறங்கிய சாஹலும் தங்களது அபார பந்துவீச்சால் சாய்த்தனர். அதன் காரணமாக, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, இந்தப் போட்டியில் சாஹலை விளையாடவைக்கும் திட்டமே இல்லை. கன்கஷன் சப்ஸ்டியூட் (மாற்று வீரரை இறக்கும் முறை) என்பது புதிரான ஒன்று. அது இன்று எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. சஹால், எதிரணியைக் கசக்குவதற்கான தீவிரத்தைக் காட்டினார். அவரால், ஆஸ்திரேலியா அணி சிறப்பான தொடக்கம் கண்டார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறினார்கள்.

 

ஆனால், அவர்களின் பேட்ஸ்மேன்களே எங்களுக்குச் சில விக்கெட்டுகளை தாரைவார்த்து விட்டார்கள். அதுதான் 20 ஓவர் கிரிக்கெட். ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது, நீங்கள் இறுதிவரை கடுமையாக விளையாடவேண்டும் அதுமட்டுமில்லாமல், வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து வெளிக்காட்டிக் கொண்டிருக்க வேண்டும். நடராஜனால், மேலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். சாஹரும் நன்றாகப் பந்து வீசினார். சஹால், இந்தப் போட்டிக்குள் இந்தியாவைத் திரும்பக் கொண்டுவந்தார். ஹர்திக்கின் கேட்ச்தான் மேட்ச்சை மாற்றியது" எனக் கூறினார்.