Skip to main content

7 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

sreesanth

 

சூதாட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, 7 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீசாந்த் முதல்முறையாக கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்க இருக்கிறார்.

 

இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், ஐ.பி.எல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபணமானது. அதன்பின், அவர் 7 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பி.சி.சி.ஐ தடைவிதித்தது. இத்தடைக்காலத்தை ஸ்ரீசாந்த் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு செய்தார்.

 

இந்நிலையில், கேரள கிரிக்கெட் சங்கம் நடத்தும் உள்ளூர் 20 ஓவர் தொடரில் ஸ்ரீசாந்த் பங்கேற்க இருக்கிறார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இவர் கே.சி.எ டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

 

டிசம்பர் மாத நடுவில், இத்தொடரை துவக்கி, ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் முடிக்க கேரள கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் முறையான அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன.