Published on 21/06/2018 | Edited on 21/06/2018
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டர் எனும் விளையாட்டு இதழ், 2018ஆம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது.

உலகின் தலைசிறந்த வீரர்களுள் ஒருவரும், இந்திய இறகுப்பந்து ஆட்டத்தின் நம்பர் ஒன் வீரருமான கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதினை இறகுப்பந்து வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். 25 வயதான இவரை, சென்ற ஆண்டு நான்கு சூப்பர் சீரிஸ் படங்கள் மற்றும் உலக தரவரிசையில் 2ஆம் இடத்தையும் பெற்றதன் மூலம் இந்த விருதுக்காக தேர்ந்தெடுத்துள்ளதாக ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டர் தெரிவித்துள்ளது.
இது வெறும் விருது மட்டுமல்ல. நடப்பாண்டில் இன்னும் சிறப்பாக செயல்பட, அடுத்தடுத்த உயர்வுகளுக்கு செல்ல இதுவொரு ஊக்கமாக இருக்கும் என நம்புவதாக கிடாம்பி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தன்ராஜ் பிள்ளைக்கு ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.