ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான போட்டியில் பங்குபெறும் அணிகள் அங்கு சென்றுள்ள நிலையில் உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் உலகக்கோப்பை குறித்த தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, "இந்திய அணிக்கு தோனி பெயரளவில் கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மைதானத்தில் இன்றும் கோலிக்கு தோனிதான் கேப்டன் என்று நான் நினைக்கிறேன். தோனி ஸ்டெம்ப்புக்குப் பின்னால் இருந்து பந்துவீச்சாளர்களிடம் பேசுகிறார், பில்ட் செட் செய்கிறார். அவர் கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன். தோனி களத்தில் இருக்கும்போது கோலி நம்பிக்கையாக உணர்கிறார். கோலியும் இதனை எப்போதும் ஒப்புக் கொண்டிருக்கிறார்" என கூறியுள்ளார். ரெய்னாவின் இந்த பேச்சை தோனி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பெருமளவு கொண்டாடி ஷேர் செய்து வருகின்றனர்.