இந்திய கிரிக்கெட் அணியில் ஹேட்டர்கள் இல்லாத வீரர்களுள் ஒருவராக இருந்தவர் ராகுல் ட்ராவிட். விக்கெட் கீப்பர், கேப்டன் இன்று பயிற்சியாளர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அவரிடம், இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ சார்வில் 25 கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றுக்கும் ராகுல் ட்ராவிட் வரிசையாக சொல்லிவரும்போது, உங்கள் வாழ்நாளில் நீங்கள் ரசித்த மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கப்பட்டது.
உடனே, ட்ராவிட் சற்றும் யோசிக்காமல் சச்சின் தெண்டுல்கர்தான் என்றார். மிகத்தரம்வாய்ந்த, கிளாஸிக்கான கிரிக்கெட் ஷாட்டுகளை அதற்கே உரித்த ஸ்டைலில் விளையாடுபவர் சச்சின். எனவே, அவரைத் தேர்ந்தெடுத்தேன் எனவும் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக இருந்த சச்சின் தெண்டுல்கரை ட்ராவிட் தேர்வு செய்ததில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இருவரும் இணைந்து இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் இந்த இணை 143 இன்னிங்ஸ்களில் விளையாடி 6,920 ரன்கள் குவித்துள்ளது. 20 சென்சுரிகளும், 50.51 சராசரி ரன்களும் அதில் அடக்கம். அதேபோல், 98 ஒருநாள் போட்டிகளில் 4,117 ரன்கள் குவித்துள்ளது இந்த இணை. அதில் 11 சென்சுரிகளும், 44.26 சராசரி ரன்களும் எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ராகுல் ட்ராவிட்டிடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யாரோடு சேர்ந்து பேட்டிங் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு, சுனில் கவாஸ்கர் எனவும் பதிலளித்துள்ளார். அவரும் ஒருவகையில் தி கிரேட் வால்-க்கு ஈடுகொடுக்கக் கூடியவர்தான்.