20-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, ரோஜர் ஃபெடரரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச்சும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடாலும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நடால், போட்டியின் முடிவில் மூன்று செட்டுகளை 6-0, 6-2, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இது ரஃபெல் நடால் வென்ற 13-வது பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டம் ஆகும். அவர் வென்றுள்ள மொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை ரஃபெல் நடால் சமன் செய்துள்ளார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், அமெரிக்காவைச் சேர்ந்த சோஃபியா கெனினை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.