உலககோப்பையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில் அந்த அணியின் இளம் வீரரான முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறாமலே தொடரை விட்டு வெளியேறியது. இதனால் அணியின் கேப்டன் சர்பராஸ் உள்ளிட்ட அணியின் அனைத்து வீரர்களும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் அந்த அணியின் இளம் வீரரான முகமது அமீர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
27 வயதான முகமது அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அமீர் 3627 ரன்கள் எடுத்ததுதான், 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த டெஸ்ட் வீரரான இவரின் ஓய்வு அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.